/* */

மனு வாங்க காத்திருந்த மாநகராட்சி மேயர்: குறைகளை கூற வராத மக்கள்

திங்கட்கிழமை தோறும் காலை 10 முதல் 12 மணி வரை குறைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மேயர் அறிவித்திருந்தார்

HIGHLIGHTS

மனு  வாங்க காத்திருந்த மாநகராட்சி மேயர்:  குறைகளை கூற வராத மக்கள்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை வாங்க காத்திருந்த மேயர் மற்றும் துணை மேயர் , மாமன்ற உறுப்பினர்கள்

புதியதாக மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் , துணை மேயராக குமரகுருநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை மாநகராட்சியில் உள்ள குறைகளை பொதுமக்கள் நேரடியாக எழுதி மேயர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் இடம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் நடைபெற்றது.

குறுகிய காலத்தில் அறிவிப்பு வெளியானதால் மனுக்கள் அளிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டது. இன்று இரண்டாவது வாரமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது எனவும் இதன் மூலம் மக்களுக்கும் சிறந்த ஒரு தீர்வு காணவோ வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

அதன்பின் ஒரு சிலர் மட்டுமே மனுக்களை அளித்தனர். மனுக்களை அளிக்க விருப்பம் இல்லாதது போல் பொதுமக்கள் செயல்பாடு காணப்பட்டது. மேயர் துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் மனுக்கள் வாங்கும் நிகழ்வு இடத்தில் மணிக்கணக்கான நேரம் காத்திருந்தும் சொற்ப அளவில் மனு பெறப்பட்டது.

குறைகளைத் தெரிவிக்கலாம் என வெளிப்படையாக அறிவித்த மாநகராட்சிக்கு பொதுமக்கள் மக்களாக தங்கள் குறைகளை தெரிவிக்க கூட வராதது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

குறைகளைத் பொதுமக்கள் தெரிவிக்காவிடில் நல்ல திட்ட பயன்கள் எவ்வாறு அந்தப் பகுதி கிடைக்கும் எனவும் அதன் பின் மாமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என குறை கூறுவது எவ்வாறு பொருந்தும் என அவர்கள் திருப்பி கேட்கும் நிலை உருவாகிவிட்டது

Updated On: 28 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...