/* */

காஞ்சிபுரம் : அரசு அனுமதியளித்தும் பயனில்லை, திரையரங்குகள் மூடல்

தமிழக அரசு இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்திருந்தது, பார்வையாளர்கள் வராததால் காஞ்சியில் திரையரங்குகள் மூடப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  அரசு அனுமதியளித்தும் பயனில்லை, திரையரங்குகள் மூடல்
X

காஞ்சிபுரத்தில் பார்வையாளர்கள் வராததால் மூடப்பட்ட திரையரங்கம்.

தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

இதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கேளிக்கை விடுதிகள் , கடற்கரை , உயிரியல் பூங்கா உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதித்து திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டு தூய்மை பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும் இன்று காலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் போதிய பார்வையாளர்கள் , புதிய சினிமாக்கள் எதுவும் வெளியாகாததால் மீண்டும் ஒரு வாரம் திரையரங்குகள் மூட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதுவரை தொடர்ந்து சுகாதார பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் பார்வையாளர்களின் பாதுகாப்புகள் அனைத்தும் உறுதி செய்யப்படும் என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது