/* */

வெகு விமர்சையாக நடைபெற்ற பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

பூக்கடை சத்திரம் பகுதியில் திரௌபதி அம்மன் ஆலயம் காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் குல சத்திரியர் சங்கம் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

வெகு விமர்சையாக நடைபெற்ற பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

காஞ்சிபுரம் பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியார் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றிய போது.

காஞ்சிபுரம் பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தலங்களும், திவ்ய தேசங்களும் அடங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு அம்மன், முருகன் ஆலயங்களும் உள்ளது.

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே வன்னிய குல சத்திரிய சங்கத்தின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு புனரமைக்கும் நோக்கில் பல லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் வளாகம் மற்றும் விமான கோபுரம், முருகர் நவகிரகம் விநாயகர் உள்ளிட்ட தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை 9 மணி அளவில் ஆறாம் காலை பூஜை நடைபெற்று பூர்ணாஹூதி மற்றும் கலச புறப்பாடு நடைபெற்றது. கலச புறப்பாடு திருக்கோயிலை வலம் வந்த பின்பு ராஜகோபுரம் மூலவர் கோபுரம் என அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தும் புனித நீர் தெளித்தும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு குங்குமம், கலசம் உள்ளிட்டவை பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஆர் டி சேகர், செயலாளர் முத்து செல்வன் , பொருளாளர் அருள் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் சீடர் ஸ்ரீ சஞ்சீவ ராஜா சாமிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

Updated On: 8 Feb 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...