/* */

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் பிரமோற்சவ தேரோட்டம்

இளையனார்வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

HIGHLIGHTS

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் பிரமோற்சவ தேரோட்டம்
X

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரமோற்சவ விழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் இளையனார் வேலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மலையன்,மாகறன் என்ற இரு அசுரர்கள் வேல் கொண்டு அழித்ததுடன் அவ்வேல் பாய்ந்த இடமாக இளையனார் வேலூர் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் 2022ம் ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த ஐந்தாம் தேதி விநாயகர் உற்சவத்துடன் துவங்கி 7ம் தேதி பிரமோற்சவ கொடியேற்றம் சிவாச்சாரியர்களால் ஏற்றபட்டது. நாள்தோறும் காலை, மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி கிராம வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்து வருகிறார்.

இன்று ஏழாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் காஞ்சி குல மரபினர் சார்பில் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் திருத்தேரில் எழுந்தருளினார். இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், உதவி ஆணையர் தியாகராஜன், சரக ஆய்வாளர் திலகவதி, செயல்அலுவலர் குமரன், இளங்கோவன் ஆகியோர் வடம் பிடிக்க திருத்தேர் கிராம வீதிகளில் வலம் வந்தது. திருத்தேர் உற்சவத்தையொட்டி காவல்துறை, மின்வாரியத்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

Updated On: 13 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது