/* */

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவஞ்சலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காஞ்சி மாவட்ட அதிமுக சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவஞ்சலி
X

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரித்து மலர் தூவிய மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சுந்தர், பகுதி கழக செயலாளர் , அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் காஞ்சி மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த ஜெயலலிதா கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று அவரின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி அதிமுக சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் , கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சார்பிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் அதிமுக தொண்டர்களும் நினைவஞ்சலியை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் பெரியார் துணை அருகே மதியம் 500 நபர்களுக்கு மாவட்ட கழக பொருளாளர் வள்ளிநாயகம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு புளி சாதம் சாம்பார் சாதம் மற்றும் வெஜிடபிள் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது.

Updated On: 2 Jan 2024 5:04 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்