/* */

அரியலூரில் நிலஆய்வாளர்,வரைவாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Land Surveyor Jobs - நில ஆய்வாளர்,வரைவாளர், உதவி வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரியலூர் மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் நிலஆய்வாளர்,வரைவாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
X

Land Surveyor Jobs -அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கப்பட்டுள்ள நில ஆய்வாளர்/வரைவாளர்/நில ஆய்வாளர் மற்றும் உதவி வரைவாளர்(Surveyor/ Draughtsman/ Surveyor cum Assistant Draughtsman பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

மத்திய/மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர்கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் TNPSC ,TNUSRB ,IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடகுறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கப்பட்டுள்ள நில ஆய்வாளர்/வரைவாளர்/நில ஆய்வாளர் மற்றும் உதவி வரைவாளர் (Surveyor/ Draughtsman / Surveyor cum Assistant Draughtsman பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 24.08.2022 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடை பெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ மாணவியர்கள் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் (Passport size Photo), தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரகுறிப்புகளுடன் (BIO-DATA) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 9:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்