/* */

கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க விவசாய சங்கம் கோரிக்கை

காவேரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கொள்ளிடத்தில் கதவணை அமைக்க கோரிக்கை வைத்துள்ளார்.

HIGHLIGHTS

கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க  விவசாய சங்கம் கோரிக்கை
X
அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் (பைல் படம்).

காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:-

கடந்த ஒரு மாதம் காலமாக கொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வகையில் தண்ணீர் போனதால் வடகரையில் உள்ள தூத்தூர் வைப்பூர் முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி கோவித புத்தூர் ஸ்ரீபுரந்தான் அரங்கோட்டை அனைகுடி போன்ற விவசாயிகள் பயிர் செய்த பருத்தி சூரியகாந்தி பூ, சோளம் நெல் ஆகியவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதை வேளாண்மை துறை ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்திற்க்கு வருகை தரும் தமிழக முதலமைச்சரிடம் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் கோரிக்கையாக வலியுறுத்த வேண்டும்.

மறுதையாறு வைப்பூர் அருகே கொள்ளிடத்தில் கலக்கிறது அங்கே இருந்து மறுதையாற்றின் இரண்டு பக்கமும் சர்வே செய்து அகலமாகவும் உயரமாக கறைகள் அமைக்க வேண்டும். தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்ய அனைத்து கூட்டுறவு சங்களில் போதுமான உரங்கள் இருப்பு வைக்கவேண்டும். தா. பழூர் பகுதி விவசாயிகள் பயன் பெறும் பொண்ணாறு பாசன வாய்க்கால் தலைப்பு மணல் மேடாகி உள்ளது. அதை உடனடியாக தூர் வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 Aug 2022 9:11 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி