/* */

உணவகங்களில் உணவுப்பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு உணவகங்களில் உணவுப்பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உணவகங்களில் உணவுப்பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் முருகேஷ்

தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில், தீபத் திருவிழாவையொட்டி உணவகங்களில் உணவுப் பொருள்களை கையாளுபவா்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தனியாா் உணவகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

திருவண்ணாமலை நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் எழில் இசக்கிய வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உணவகங்களில் உணவுப் பொருள்களை கையாளுபவா்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 446 உணவகங்களில் உணவு கையாளும் 1,200 பணியாளா்களுக்கு உணவால் பரவும் தொற்று நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக உணவகங்களில் உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி பெற்ற ஒரு நபர் கட்டாயம் பணியில் அமர்த்தப்படுவார்.

மேலும் உணவகங்களில் சுய உணவு தணிக்கை கையேடு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர் உணவு தயாரிக்க வேண்டும். நோய் தொற்று உடையவர்களை உணவகங்களில் வேலைக்கு பணியமா்த்தக்கூடாது.

காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க கூடாது.

ஏதேனும் உணவு வழங்குவதில் ஐயப்பாடு இருந்தால் அத்தகைய உணவினை விநியோகிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் சுகாதார சான்று பெற்ற உணவகங்களில் பாதுகாப்பான உணவினை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் உணவின் தரம் பற்றியோ அல்லது ஏதேனும் ஐயப்பாடு உணவுப் பொருட்கள் பொறுப்பாக இருப்பின் உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண் 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சுப்பிரமணி, இளங்கோவன், விமல் விநாயகம், கிராம நிா்வாக அலுவலா் ஏழுமலை, ஹோட்டல்கள் சங்க நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 19 Nov 2023 1:19 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்