/* */

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் புகார்கள் தெரிவிக்க அலைபேசி எண் வெளியீடு

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தேர்தல் தொடா்பான புகாா்களை தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் புகார்கள் தெரிவிக்க அலைபேசி எண் வெளியீடு
X

மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவரை, 9444137000 என்ற அலைபேசியிலும், ஆட்சியா் அலுவலகத்தை 04175-233333 என்ற எண்ணிலும், முகாம் அலுவலகத்தை 04175-233366 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.

செங்கம்

செங்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான தே.தீபசித்ராவை 9445461753 என்ற எண்ணிலும், செங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் வ.ரேணுகாவை 9486437599 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியருமான ஆா்.மந்தாகினியை 9445000420 என்ற எண்ணிலும், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளா் எஸ். முருகனை 9952277859 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட கலால் உதவி ஆணையருமான க.செந்தில்குமாரை 9750386411 என்ற எண்ணிலும், கீழ்பென்னாத்தூா் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ஜெ.சுகுணாவை 7904612207 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருமான எம்.சாந்தியை 9080308354 என்ற எண்ணிலும், கலசப்பாக்கம் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான சி.முனுசாமியை 6381315362 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் .

இதேபோல, ஜோலாா்பேட்டை, சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா , 81229 04303 ,

திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் புகாா்களை தேர்தல் பொது பார்வையாளர் குர்பிரீத் வாலியா 90429 29964 தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். .

Updated On: 1 April 2024 1:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  2. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
  3. இந்தியா
    பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு
  4. இந்தியா
    சிவில்சர்வீஸ் தேர்வு எழுதிய ஏஐ! மார்க் எவ்வளவு தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை: பொதுமக்கள், பெற்றோர்கள்...
  6. பொன்னேரி
    பாதாள கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா
  7. இந்தியா
    ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
  8. திருவண்ணாமலை
    அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. பொன்னேரி
    அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு..!