அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு..!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு..!

சாலை  மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பழவேற்காட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் உயிரிழந்தார். பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

பழவேற்காட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த எடமணி பகுதியை சேர்ந்தவர் சம்பத். பழவேற்காடு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த சம்பத் ( வயது 52) காலை வழக்கம் போல தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக வீட்டில் இருந்து பழவேற்காட்டிற்கு வந்துள்ளார்.

பசியாவரம் மேம்பாலம் அருகே வந்த போது பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மை பணியாளர் சம்பத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விபத்தை ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக பழவேற்காடு -பொன்னேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story