அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை: பொதுமக்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா  விற்பனை: பொதுமக்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

கஞ்சா போதையில் கிரிவல பாதையில் விழுந்து கிடந்த சாது

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை செய்த பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை செய்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வருட காலமாக வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பௌர்ணமி நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான சாமியார்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் நடைபாதையிலேயும், கிரிவலம் வரும் பக்தர்களுக்காக ஓய்வெடுப்பதற்காக அரசாங்கம் கட்டியுள்ள கூடங்களிலும் நிழற்கூடங்களிலும் இவர்களது வசிப்பிடமாக இருந்து வருகிறது.

கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களில் உண்மையானவர்கள் யார்? போலியானவர்கள் யார் என கண்டுபிடிப்பதே மிகக் கடினம் தான்.

கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த சாதுக்களுக்கு பணம், அன்னதானம், வஸ்திர தானம் என செய்து வருகின்றனர். இதனாலும் கிரிவலப் பாதையில் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது கிரிவலப் பாதையில் தங்கி உள்ள சாதுக்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டும் என அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளி மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு அங்கு தலைமறைவாகி இங்கு சாதுக்கள் என்ற போர்வையில் வாழ்ந்து வருபவர்களும் உள்ளனர். இவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்த கதையும் உண்டு. கடந்த வருடம் கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களின் கைரேகையை போலீசார் பதிவு செய்து அவர்களின் முகவரி அவர்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து சென்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு போதை பொருட்களுடன் வெளிநாட்டு பெண் உட்பட 10 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

உருட்டு கட்டையால் தாக்கிக் கொண்ட போதை சாதுக்கள்

நேற்று முன்தினம் இரவு, அன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை பக்ரீத் தினம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் இரவு நேரத்தில் கிரிவலம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சூரிய லிங்கம் அருகே கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் இரண்டு சாதுக்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனராம்.

அப்போது அந்த வழியாக கிரிவலம் வந்த பக்தர்கள், மீது கல் வீசியும் மண்ணை வீசியும் அந்த சாதுக்கள் பக்தர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிரிவலம் வந்த பெண் பக்தர்கள் அலறியடித்து ஓட்டுப் பிடித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாதுக்களை எச்சரித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

அரசு கலைக் கல்லூரி எதிரே

இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை நகர டிஎஸ்பி சாந்தலிங்கம் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர கஞ்சா சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டதும் ஓட முயன்ற இரண்டு பெண் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை சமுத்திரம் காலணியை சேர்ந்த முனியம்மாள், சஞ்சய், தர்மன், கவிதா, கல் நகரை சேர்ந்த சந்துரு என தெரியவந்தது.

அவர்களிடத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மேலும் கல்லூரி எதிரே உள்ள பூங்கா பகுதியில் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் ஆந்திரா பகுதியைச் சேர்ந்த நபர் தப்பி ஓடி விட்டதால் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். அரசு கலைக் கல்லூரிக்கு எதிரிலேயே கஞ்சா பிடிபட்டது திருவண்ணாமலை பெற்றோர்கள், பொதுமக்களிடம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story