/* */

புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவித்தொகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்காக வங்கி பற்று அட்டையை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

புதுமை பெண் திட்டத்தின் மூலம்  மாணவிகளுக்கு உதவித்தொகை
X

புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்காக வங்கி பற்று அட்டையை கலெக்டர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்காக வங்கி பற்று அட்டையை கலெக்டர் வழங்கினார்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, திருவள்ளூா் மாவட்டம், பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் தொடக்கிவைத்தாா்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கருணாநிதி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் புதுமைப் பெண் திட்டத்திற்கான மாணவிகளுக்கு வரவேற்பு கோப்புறை மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 உதவி தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புதுமைப்பெண் திட்டத்தில் முதல்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 5,697 மாணவிகள் பயன்பெற்றுள்ளனா்.

இன்று 2-ஆம் கட்டமாக 3,112 மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் அவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி முடிக்கும் வரை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. வளர் இளம் பருவத்தில் திருமணம் செய்து கொள்வதால் பெண்கள் பல்வேறு உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும். பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் மீனாம்பிகை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகளின் மாவட்ட திட்ட அலுவலா் கந்தன், கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் கணேசன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சிலம்பரசன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 9 Feb 2023 12:26 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்