/* */

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து கார்த்திகை தீப திருவிழாவிற்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல்

HIGHLIGHTS

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்
X

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரயில்வே பாதையின் குறுக்கே, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இத்திட்டத்துக்காக, தமிழக அரசு 30.38 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த மேம்பாலத்தின் மொத்த நீளம் 666 மீட்டர். ஓடுதள அகலம் 15 மீட்டர். மேலும், திருவண்ணாமலை சாலை வழியாக 82 மீட்டரும், திண்டிவனம் சாலை வழியாக 257 மீட்டரும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அதோடு, மேம்பாலத்தின் இருபுறமும், 15 மீட்டர் அகலத்தில் அணுகு சாலையும், 7 மீட்டர் அகலத்தில் இருபக்க சேவை சாலையும் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து கார்த்திகை தீப திருவிழாவிற்க்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்தார்.

இன்று திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பால பணிகளை நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கும், ஒப்பந்த காரர்களுக்கும் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 21 Sep 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’