/* */

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்
X

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா்முருகேஷ் , தலைமை தாங்கினார்.

இதில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 607 -க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில் ஆர்டிஓ மந்தாகினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சாதிச்சான்று வேண்டி மனு

தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி நல சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையிலான நிர்வாகிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குருமன்ஸ் பழங்குடியின மக்களால் குருமன்ஸ் எஸ்.டி. சாதிச்சான்று வேண்டி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசால் ஊட்டி பழங்குடி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சிறப்பு ஆராய்ச்சி குழு அமைக்கப்பட்டு குருமன்ஸ் பழங்குடியின மக்களின் தொழில், தெய்வ வழிபாடு, பிறப்பு, இறப்பு, மொழி, கலாசாரம் போன்ற அனைத்து பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்யப்பட்டு குரும்பா, குரும்பர், குருமன் ஆகியன ஒத்த பெயரான குருமன்ஸ் பழங்குடியினர் தான் என்று அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இனத்திற்கு கலாசாரத்தினை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டு கலாசாரத்தின் அடிப்படையில் குருமன்ஸ் எஸ்.டி. சாதிச்சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பழங்குடி இயக்குனரால் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளது.

அவ்வாறு இருப்பின் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் குருமன்ஸ் எஸ்.டி. சாதிச்சான்று வேண்டி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், பழங்குடி இயக்குனர், பழங்குடி ஆணையர் அனைத்து இடங்களிலும் பலமுறை 5 ஆயிரம் மனுக்களுக்கும் மேல் சாதிச்சான்று வேண்டி விண்ணப்பித்து சட்ட ரீதியான ஆதாரங்கள் இருந்தும் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் ஏமாற்றி வருகின்றனர்.

எனவே எங்களுடை பிறப்புரிமையை மீட்டு எடுக்கின்ற வரை தமிழ்நாடு முழுவதும் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

என அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 Aug 2023 1:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?