/* */

ஜமுனாமரத்தூரில் கள்ளச்சாராயம், நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து, 2200 லிட்டா சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜமுனாமரத்தூரில் கள்ளச்சாராயம், நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
X

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில், போலீசார் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதி முழுவதும் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில், திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன் (போளூர்), ராஜா (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), ரமேஷ் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மற்றும் போலீசார் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதி முழுவதும் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேல் நம்மியம்பட்டு மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊறல், பால்வாடி பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 2,200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்ட 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 21 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்