/* */

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆடையூர் ஏரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9.07 லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சிக் குட்டை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

மேலதிக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 1.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் நூலகக் கட்டடம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

உடையான் நந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் ,உதவி திட்ட அலுவலர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 March 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது