/* */

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை10-ந் தேதி தொடக்கம்

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10-ந் தேதி தொடங்குகிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை10-ந் தேதி தொடக்கம்
X

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி (பைல் படம்).

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

இதுபற்றி கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இளநிலை பட்டங்களான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்கிறது. கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதில் முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.

தொடர்ந்து கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. அதன் பின்னர் வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 17 மற்றும் 18-ந் தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. தமிழ் மொழி பாடப்பிரிவுக்கு 22-ந் தேதி காலையிலும், அன்று பிற்பகல் ஆங்கில மொழி பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

அதன் பின்னர் வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 17 மற்றும் 18-ந் தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. தமிழ் மொழி பாடப்பிரிவுக்கு 22-ந் தேதி காலையிலும், அன்று பிற்பகல் ஆங்கில மொழி பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமும், கல்லூரியின் இணையதளத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தகவல் பலகையில் கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு காலதாமதமாக வரும் மாணவர்கள் பங்கேற்க முடியாது என குறிப்பிட்டு உள்ளார்.

Updated On: 7 Aug 2022 1:38 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!