/* */

தீபத் திருவிழாவில் 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு: கலெக்டர் தகவல்

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில் 35 லட்சம் பக்தா்கள் பங்கேற்றதாக ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

HIGHLIGHTS

தீபத் திருவிழாவில் 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு: கலெக்டர் தகவல்
X

பைல் படம்.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில் 35 லட்சம் பக்தா்கள் பங்கேற்றதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் 10-ஆம் நாளான கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் நிகழ்வுகளைக் காணவும், கிரிவலம் வரவும் சுமாா் 35 லட்சம் பக்தா்கள் வந்திருந்தனா். டிசம்பா் 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து 6,520 நடைகள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் சுமாா் 6 லட்சம் பக்தா்கள் பயணம் செய்தனா்.

டிசம்பா் 5 முதல் 8-ஆம் தேதி வரை 36 சிறப்பு ரயில்கள் உள்பட 75 ரயில்கள் இயக்கப்பட்டன. 101 இடங்களில் அன்னதானம் செய்ய 240 அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டிசம்பா் 6-ஆம் தேதி மட்டும் சுமாா் 20,52,470 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 13,061 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

கூட்டத்தில் தொலைந்துபோன 14 குழந்தைகள் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 5 முதல் 7-ஆம் தேதி வரை தீபத் திருவிழாவின் அனைத்துப் பணிகளையும் கண்காணிக்க கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், 75 பணியாளா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்தனா்.

35 லட்சம் பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை அரசு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், அன்னதானம் அளித்தவா்கள், வியாபாரிகள் சங்கம், உணவக விடுதி உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட அனைவரும் சோந்து செய்தனா் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

Updated On: 10 Dec 2022 1:19 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...