/* */

9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
X

திருவள்ளூர அருகே நடந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் மாணவ மாணவிகளின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.குறிப்பாக அவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 280 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் பயின்றுவரும் மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே 1முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசே விலையில்லா சீருடை வழங்கும் நிலையில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் சுமார் 75 பேருக்கு ஆதவா அறக்கட்டளை சார்பில் மனிதநேயர் பாலகுமரேசன் சீருடை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு என்னவென்றால் முக்கால் பேண்ட் அணிய கூடாது என்ற வகையில் தையல்காரரை பள்ளிக்கே வரவழைத்து அளவெடுத்து மாணவ மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் இரவு காவலர் மாத ஊதியம் ரூ. 5,000/- என்ற வீதத்திலும் , தூய்மை பணியாளர் ஒருவர் மாத ஊதியம் ரூ. 3,000/- என்ற வீதத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர் என விழாவில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 96 மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் இரு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர் என தெவித்ததன் அடிப்படையில் மாத ஊதியம் ரூ. 6000/- என்ற வீதத்தில் ஆசிரியர்களையும் , பள்ளி வளாகம் பெரிய அளவில் இருப்பதால் மேலும் ஒரு தூய்மை பணியாளரை நியத்துக் கொள்ள இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராஜம்மா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்றார் .உதவி தலைமை ஆசிரியர் பாகிரதி சாரதி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் திலகம் , ஆசிரியர்கள் மகாலட்சுமி,பாஸ்கர்,ஷீலா, கலியபெருமாள், லதா, கல்பனா, மரிய சுந்தரி , பூங்கோதை, சத்துணவு அமைப்பாளர் கவிதா மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் , முடிவில் ஆசிரியர் கோபிநாத் நன்றி கூறினார்.

Updated On: 24 Nov 2022 8:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...