/* */

நெல்லையில் சுவர் விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்: அதிகாரிகள் ஆய்வு

நெல்லை பள்ளியில் சுவர் விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

நெல்லையில் சுவர் விழுந்து மாணவர்கள்  உயிரிழந்த சம்பவம்: அதிகாரிகள் ஆய்வு
X

நெல்லை டவுனில் உள்ள சாப்டர் பள்ளியில் கழிவறை இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு.

நெல்லை டவுனில் உள்ள சாப்டர் பள்ளியில் கழிவறை இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு.

நெல்லை டவுனில் பொருட்காட்சி மைதானத்துக்கு எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். 4 மாணவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டிடத்தின் திறன் தன்மை குறித்த ஆய்வு செய்ய 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேரடியாக சென்று அந்தப் பள்ளியின் இடிந்த கழிப்பறை இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதேபோல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்த பிறகு இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

Updated On: 18 Dec 2021 2:32 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை