/* */

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்-கலைஞர்கள் கண்ணீர்

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்-கலைஞர்கள் கண்ணீர்
X

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள் என கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் மல்க மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயில் திருவிழாக்களை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், கோயில் திருவிழாக்களில் இரவு 12 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கோரி திருநெல்வேலியில் தென்மண்டல அனைத்து கலைச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரகாட்ட கலைஞர்கள் இன்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கரகாட்ட கலைஞர் ஒருவர் கூறுகையில், எல்லா நிகழ்ச்சிக்கும் அனுமதிக்கிறார்கள். ஆனால் கோயில் திருவிழாவில் எங்களை போன்ற கலைஞர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. பகல் முழுவதும் ஊரடங்கு போடாமல் இரவில் மட்டும் ஏன் ஊரடங்கு போட வேண்டும்? எங்கள் வாழ்வாதாரம் பற்றி அரசுக்கு கவலை இல்லையா ?. 2000 ரூபாய் நிவாரணம் கொடுக்கிறார்கள். அதை வைத்து வாழ்ந்து விட முடியுமா. இரவு 12 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். இதே 2000 ரூபாயை நாங்கள் கொடுத்தால் அவர்களால் வாழ முடியுமா? எங்களுக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள். இல்லாவிட்டால் கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Updated On: 21 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது