/* */

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்பு.

HIGHLIGHTS

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
X

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை அடுத்துள்ள சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரையாற்றினார். பகுதி பொருளாளர் பீர் மற்றும் 6,7 வது வார்டு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ் எஸ் ஏ கனி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிரதன், எம்எஸ் பரமசிவம், பாஸ்டர் அமிர்த குமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்டத் தலைவர் ராஜசேகர், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், மதினா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக 6வது வார்டு தலைவர் சதாம் உசேன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் பகுதி தலைவர் இலியாஸ் செய்தார்.

Updated On: 18 April 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது