/* */

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் பெட்டி

திருவாரூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. கயல்விழி கேட்டுக்கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

,திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அ.கயல்விழி உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க மாவட்ட காவல்துறை அலுவலகம் முன்பு புகார் பெட்டி அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கென ஒரு காவல் உதவி -ஆய்வாளர், ஒரு தனிப்பிரிவு காவலர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 6 மணிவரை புகார் பெட்டியில் போட்டு செல்லலாம்.

அத்தகைய மனுக்கள் நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்டகாவல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதன் விபரம் மனுதாரரின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (ஷிவிஷி) அனுப்பப்படும். அதனால் மனுதாரர்கள் கோரிக்கை மனுவில் தங்களது அலைபேசி எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும் என எஸ்.பி.கயல்விழி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 27 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...