/* */

ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது; முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு : தென்காசி எம்எல்ஏ தகவல்

ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார் என்று தென்காசி எம்எல்ஏ கூறியுள்ளார்.

HIGHLIGHTS

ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது;    முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு : தென்காசி எம்எல்ஏ தகவல்
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழக அரசின் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளுடன் சுரண்டை வியாபாரிகள் சங்கம் மற்றும் ஒய்எம்சிஏ இணைந்து நடத்திய இரண்டாவது நாள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சுரண்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார், ஒய்எம்சிஏ தலைவர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார், ஒய்எம்சிஏ செய்தி தொடர்பாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார், கொரோனா தடுப்பூசியின் பயன்கள் மற்றும் போட வேண்டியதன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் பேசினார்.

முகாமினை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் துவக்கி வைத்து பேசும்போது, தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்களும், வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டுக்கொண்டு கொரோனாவை தடுத்திட முன்வர வேண்டும் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

முகாமில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர், வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன், நல்ல சமாரியன் கிளப் செயலாளர் கிருபாகரன், ஜேம்ஸ், ஆபிரகாம், சுகிர்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், சமுத்திரம், சங்கர், அமுதா சந்திரன், கந்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது