/* */

புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் களைகட்டிய மாணவிகளின் கலை நிகழ்ச்சி

புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி களை கட்டியது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் களைகட்டிய மாணவிகளின் கலை நிகழ்ச்சி
X

புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் களைகட்டிய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழிகாட்டலின் படி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தினவிழா,சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கண்காட்சியையொட்டி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆலோசனையின்படி, கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ,மாணவிகள் 75 ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையிலும், அரசின் நலத்திட்டங்கள் பற்றியும் பரதநாட்டியம், தனிநபர் நடனம்,குழு நடனம்,குழு நாடகம் ,தற்காப்பு கலைகளான சிலம்பம்,சுருள்வாள் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள்,பெற்றோர்கள்,இளைஞர்கள் ,பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

அதே போல் கண்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 18 துறைகளின் அரங்குகளை சுற்றிப்பார்த்து அதன் செயல்பாடுகளை அரசு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

பின்னர் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து அச்சிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று பள்ளி கல்லூரி மாணவிகளின் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் யோகா, பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் மூலம் மாணவிகள் கண்காட்சியில் நடனம் ஆடி அசத்திய பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்தது.

மேலும் சிறந்த முறையில் கண்காட்சி அரங்குகள் அமைத்த மற்றும் நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சான்றிதல் மட்டும் சால்வைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On: 17 April 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!