/* */

புதுக்கோட்டை: திமுக வேட்பாளர் பட்டியலில் குளறுபடி

புதுக்கோட்டைதிமுக வேட்பாளர் பட்டியலில் குளறுபடி காரணமாக நகர செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

புதுக்கோட்டை: திமுக வேட்பாளர் பட்டியலில் குளறுபடி
X

நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது  அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் 

தமிழகம் முழுவதும் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் நகராட்சி மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தமிழகம் முழுவதும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, தேமுதிக, என பல்வேறு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி பேரூராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாததால் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் தற்போது திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது தலைமையில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வாய்ப்புகள் கேட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்ட அனைத்து வார்டுகளில் ஒரு சில வார்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வட்ட கழக செயலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமான வழங்கியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை எனக் கூறியும் நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது தலைமையில் அவருடைய அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Updated On: 3 Feb 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  3. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  4. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  7. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  8. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  9. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  10. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி