/* */

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள் 16 பேர் காயம்

ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த  காளைகள் 16 பேர் காயம்
X

முக்காணிப்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை (19.01.2023) தொடக்கி வைத்தார்.இதையொட்டி அமைச்சர் முன்னிலையில், அனைத்து மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு உறுதிமொழியான, எங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும், பேணிக் காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும், வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் விளையாடுவோம் என்றும் உளமாற உறுதிமொழி கூறுகிறோம் என்ற ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை, அனைத்து மாடுபிடி வீரர்களும் எடுத்துக் கொண்டனர்.



இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 438 காளைகளும் அதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் வாடி வாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகளும் மற்றும் அண்டா பேன் கட்டில் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கப்பட்டன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளின்படியும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்பட்டது.

மேலும் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுத் தலைவர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர் எஸ்.கே.மிட்டல், ஜல்லிக்கட்டுப் போட்டியினை நேரில் பார்வையிட்டு, அரசு விதிமுறைகளின்படி போட்டி நடைபெறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு துளிகள்… இதில் 20 காளைகளை அடக்கிய மாத்தூர் கவாஸ் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுத்து இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளையாக காவல் உதவி ஆய்வாளர் அனுராதாவின் காளை தேர்வு செய்யப்பட்டு பிரிட்ஜ் ஒன்று பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

Updated On: 19 Jan 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...