/* */

உள்ளாட்சித்தேர்தல்: புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழுதேர்தலில் திமுக வெற்றி

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 20.10.2021 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்:  புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழுதேர்தலில் திமுக வெற்றி
X

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு எண். 9-க்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர் கை.பழனிச்சாமி உடன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், நிர்வாகி எம்.எம்.பாலு உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு 9-ஆவது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பதவியிடங்களுக்கு 09.10.2021 அன்று நடைபெற்ற தற்செயல் தேர்தலில் பதிவான வாக்குகள் 12.10.2021 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு எண். 9-க்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கை.பழனிச்சாமி என்பவர் 22,645 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அஇஅதிமுக வேட்பாளர் பா.அழகுசுந்தரி என்பவரை விட 12,934 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அஇஅதிமுக வேட்பாளர் பா.அழகுசுந்தரி 9711 வாக்குகள் பெற்றார்.

திருமயம் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண்.5-க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ,கா.சுப்பிரமணியன் என்பவர் 2,015 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அஇஅதிமுக வேட்பாளர் பொன்.பன்னீர்செல்வம் என்பவரை விட 655 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அஇஅதிமுக வேட்பாளர் பொன்.பன்னீர்செல்வம் 1,360 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ச.அர்ச்சனாதேவி என்பவர் 47 வாக்குகள் பெற்றார்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட ரா.பழனிவேல் என்பவர் 1,144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மறவாமதுரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திரு.அ.அடைக்கன் என்பவர் 1,542 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பனையூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட ரா.பழனியப்பன் என்பவர் 544 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாங்காடு கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டசெ.ஜானகி என்பவர் 1,499 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்தபடியாக வந்த து.தீபா என்பவரை விட 48 வாக்குகள் அதிகம் பெற்று மாங்காடு ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி கிராம ஊராட்சி வார்டு எண்.6-க்கான உறுப்பினர் தேர்தலில் மா.இளையராஜா என்பவரும், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நல்லம்பாள்சமுத்திரம் கிராம ஊராட்சி வார்டு எண்.2-க்கான உறுப்பினர் தேர்தலில் ச.முத்தையா என்பவரும், திருவாக்குடி கிராம ஊராட்சி வார்டு எண்.5-க்கான உறுப்பினர் தேர்தலில் ம.வசந்தி என்பவரும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு எண்.7-க்கான உறுப்பினர் தேர்தலில் சி.மாணிக்கம் என்பவரும், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நெய்வாசல் கிராம ஊராட்சி வார்டு எண்.9-க்கான உறுப்பினர் தேர்தலில் திரு.பெரி.மதன் என்பவரும், பி.அழகாபுரி கிராம ஊராட்சி வார்டு எண்.4-க்கான உறுப்பினர் தேர்தலில் சித.ராஜேந்திரன் என்பவரும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குலமங்களம் தெற்கு கிராம ஊராட்சி வார்டு எண்.9-க்கான உறுப்பினர் தேர்தலில் ரெ.விஜயா என்பவரும், வேங்கிடகுளம் கிராம ஊராட்சி வார்டு எண்-7-க்கான உறுப்பினர் தேர்தலில் நா.செல்வம் என்பவரும் வெற்றி பெற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கீழத்தானியம் கிராம ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு த.நல்லையா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. இதுபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 33 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 20.10.2021 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் கடந்த 9.10.2021 அன்று நடைபெற்றது. இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு எண்.9, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண்.5, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பனையூர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாங்காடு, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் அரசமலை, கீழத்தானியம், மறவாமதுரை ஆகிய கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 41 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் அனைத்தும் 23.09.2021 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் 25.09.2021 அன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெறும் நாளான 25.09.2021 அன்று தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றதால் 33 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 1 கிராம ஊராட்சி மன்றத்தலைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

எஞ்சிய அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நல்லம்பாள்சமுத்திரம் ஊராட்சி வார்டு எண்.2 மற்றும் திருவாக்குடி ஊராட்சி வார்டு எண்.5, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி வார்டு எண்.4, திருமயம் ஊராட்சி ஒன்றியம், நெய்வாசல் ஊராட்சி வார்டு எண்.9, பி.அழகாபுரி ஊராட்சி வார்டு எண்.4, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குலமங்களம் தெற்கு ஊராட்சி வார்டு எண்.9, வேங்கிடகுளம் ஊராட்சி வார்டு எண்.7 மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வார்டு எண்.7 என மொத்தம் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மறவாமதுரை, அரசமலை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழப்பனையூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாங்காடு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5-வது ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9-வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான 9.10.2021 -அன்று தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Updated On: 13 Oct 2021 12:13 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...