/* */

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

Digging of pond started in Pudukottai District

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சியில் கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சியில் கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சி, கொடிக்கால்பட்டி குளத்தில் ஐடிசி நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.5,22,470 மதிப்பில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் அம்ருத் சரோவர் திட்டத்தின்படி, ஐடிசி நிறுவன பங்களிப்புடன் இத்திட்டம் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். விராலிமலையில் தொடங்கப்பட்ட இத்திட்ட பணிகளின்கீழ், மாவட்டத்தில் உள்ள 75 குளங்களில் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

விராலிமலையில் இயங்கி வரும் தனியார் உணவு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐடிசி நிறுவனம், மிஷன் சுனேரா கல் மற்றும் தானம் அறக்கட்டளை ஆகியோர் பங்களிப்புடன், கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவ.கவிதா ராமுள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மணி, ஐடிசி நிறுவன மேலாளர் சரவணன், பத்மநாதன் (மனிதவளம்), தான அறக்கட்டளை சிஇஒ வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், ரவிச்சந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர் போஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!