/* */

கஞ்சா கடத்திய வழக்கு: இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

கடந்த 25.5.2017 அன்று திருச்சி கியூ பிரிவு போலீசார் கே.கே .நகரில் உள்ள அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது பிடிபட்டனர்

HIGHLIGHTS

கஞ்சா கடத்திய வழக்கு: இலங்கையைச் சேர்ந்த  3 பேருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
X

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்

திருச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டு கிலோ கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த ரகுநேஷ் ஹரிஷ் ராம் மற்றும் ராகவ் கைது செய்யப்பட்ட இருவருக்கும் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி கே .கே .நகர் பகுதியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ரகு நேஷ்( 24 ), ஹரிஷ் ராம்( 22 ) ,ராகவ் ( 25 ) ஆகிய 3 பேரும் தங்கியிருந்து, பல ஆண்டுகளாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வது ஆகிய குற்றங்களை செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 25.5.2017 அன்று திருச்சி கியூ பிரிவு போலீசார் கே.கே .நகரில் உள்ள அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததோடு க்யூ பிரிவு போலீசாரை தாக்க முற்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர் வீட்டை சோதனை செய்தபோது அவர் வீட்டில் இருந்த கார் டிக்கியில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து மூன்று பேரையும் திருச்சி கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குருமூர்த்தி, மூன்று பேருக்கும் நான்கு பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் ஹரிஷ் ராம் மற்றும் ராகவ் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து, கள்ளத்தனமாக பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகத்திற்கு வந்தததற்காக, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.இந்த இரண்டு பேர் மீதும் இலங்கையில் பல்வேறு கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவரை தேடப்படும் குற்றவாளியாக இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 26 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரசித்து ருசித்து சாப்பிட தக்காளி ரசம் செய்வது எப்படி?
  2. மேட்டுப்பாளையம்
    பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ; சாலையோரம் ஆறாக ஓடிய கழிவு நீர்
  3. காஞ்சிபுரம்
    இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் கருப்பையை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன?
  5. கோவை மாநகர்
    மாஞ்சோலை விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் : டாக்டர்...
  6. சிங்காநல்லூர்
    கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம் ; உதயநிதி வருகை
  7. ஆன்மீகம்
    ஹஜ் புனிதப்பயணம் போகலாமா..?
  8. காஞ்சிபுரம்
    குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி, எம். எல். ஏ.
  9. காஞ்சிபுரம்
    வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர்...
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி...