உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
![உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா](https://www.nativenews.in/h-upload/2024/06/14/1915189-img-20240614-wa0013.webp)
உசிலம்பட்டி மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
உசிலம்பட்டி காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு பகுதியில், அமைந்துள்ளது சந்தன மாரியம்மன் கோவில். இக்கோவிலில் வைகாசி உற்சவ திருவிழா மூன்று நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
முதல் நாள் சந்தன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாளான இன்று கரகம் எடுத்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான முருகன் கோவில் தெரு, தேனி ரோடு வழியாக தேவர் சிலையை சுற்றி மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தனர். மூன்றாம் நாள் நிகழ்வாக குத்துவிளக்கு பூஜை, கிடா வெட்டு உள்ளட்டவை நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu