/* */

எருமப்பட்டி அரகே கார்-மொபட் மோதல்: ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்

எருமப்பட்டி அருகே கார்- மொட் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அரகே கார்-மொபட் மோதல்: ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே கார்- மொட் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர். எருமப்பட்டி அருகே உள்ள ஈச்சவாரியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் விஜயகுமார் (26). இவரும், அண்ணா நகர் பட்டறை மேட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (46), அவருடைய மனைவி கிருத்திகா (39) ஆகியோரும் ஒரு காரில் காரில் சிதம்பரம் சென்றனர். அங்குள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

எருமப்பட்டி அருகே உள்ள கருப்பனார் கோயில் பகுதியில் அவர்களின் கார் வந்தபோது, எதிரே எருமப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான கிருஷ்ணன் (59), சிங்களங்கோம்பையை சேர்ந்த வீரமலை (60) ஆகியோர் ஒரு மொபட்டில் வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன், வீரமலை ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் வந்த ராஜேஷ் கண்ணா, கிருத்திகா, விஜயகுமார் ஆகியோரும் காயமடைந்து, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த கிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Jun 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு