திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் 2 வீடுகளில் அடுத்தடுத்து நகை பணம் கொள்ளை

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் 2  வீடுகளில் அடுத்தடுத்து நகை பணம் கொள்ளை
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் 2 வீடுகளில் அடுத்தடுத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வாட்டாட்சியர் அலுவலகம் அருகே கேவிஜி நகரில் வசித்து வருபவர் சரவணன் (வயது 35). சரவணனின் சொந்த ஊர் தீராம்பாளையம் கிராமம் ஆகும். இவர் அதே பகுதியில் துறையூர் மெயின் ரோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஸ் பாய் என்ற பெயரில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆனது.

இவர் தனது ஐஸ்க்ரீம் கடையில் பணியினை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையினை இரவு 10 மணிக்கு அடைத்துவி்டடு வீட்டிற்கு வந்துள்ளார்.

தனது மனைவி ஜெசி (வயது 30) நான்கு நாட்களுக்கு முன்னர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனது தாயார் உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஊருக்கு சென்றிருந்தார். இரவு வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டிற்கு வெளியில் காய்ந்து கொண்டிருந்த துணியினை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று மடித்து வைத்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து விட்டு வீட்டில் உணவு அருந்திவிட்டு, சிறுது நேரம் இளைப்பாறிவிட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தனது சொந்த ஊருக்கு சென்று வரலாம் என்று எண்ணி இரவு 10.30மணிக்கு மேல் தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

அன்று இரவே கொள்ளையர்கள் வீட்டில் யாரும் இல்லை என்பதை நன்கு அறிந்துகொண்டு இரவு 12 மணிக்குமேல் வீட்டின் தடுப்புசுவர் வழியாக ஏறி குதித்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தனது துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். வீட்டில் உள்ளே இருந்த 4.67 இலட்சம் ரூபாய் ரொக்க பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மறு நாள் 12.05.2024 ஞாயிறுக்கிழமை சொந்த ஊரில் உறவினர் துக்க காரியத்தில் இருந்து விட்டு, மாலை 5 மணிக்கு மேல் சொந்த ஊரில் கிளம்பி வந்து பார்த்த போது தனது வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சரவணனின் பக்கத்து வீட்டிலும் வீட்டின் நபர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்துகொண்டு அந்த வீட்டின் பூட்டையும் உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து அந்த வீட்டில் இருந்த ரொக்க பணம் ரூ.1,00,000/-யும், 41 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இதில் இரண்டாவதாக கொள்ளையடிப்பட்ட வீட்டின் உரிமையாளர் அங்கப்பன் ஆவார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது சொந்த ஊரான புள்ளம்பாடி அருகே புதூர் உதமனூர் ஆகும். அங்கிருந்து இங்கு வந்து சொந்த வீடு வாங்கி இங்கு தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மகன் சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிவதால், தனது மகன் பெற்ற குழந்தைகளை பார்ப்பதற்கு சென்னை வேளச்சேரி சென்று விட்டனர். வீட்டில் கொள்ளை நடந்துள்ளது என்ற செய்தி அறிந்து அன்று இரவே சென்னையில் இருந்து காரில் திரும்பி உள்ளனர்.

தகவல் அறிந்து ஜீயபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலசந்தர், மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுராமன், மற்றும் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.. பின்னர் கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் படை பிரிவினரும், சிறப்பு காவல்படையினரும் வந்து சோதனை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story