போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு
போளூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
போளூர் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேலூர் சென்னை திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் போளூர் பேருந்து நிலையத்திற்கு தான் வரவேண்டும். தற்போது போளூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள கடலூர் சித்தூர் நெடுஞ்சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் சாலை சந்திப்பு மேம்பாடு தொடர்பாக விழுப்புரம் சாலை பாதுகாப்பு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.
அதில் விரிவான சாலை உட்கட்டமைப்பு, சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை சந்திப்பை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல், சாலை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், போளூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, சாலை பாதுகாப்பு உதவி பொறியாளர் தர்மராஜ் ,போளூர் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வேதவல்லி மற்றும் நெடுஞ்சாலை துறை ,வருவாய்த்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
போளூர் அருகே கமண்டல நாக நதியில் மண் குவியல்கள் கலைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் , ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி, எஸ்.வி.நகரம், கீழ்நகா், முள்ளிப்பட்டு கமண்டலநாகநதி ஆற்றுப் படுகைகளில் மணல் குவியல்கள் இருந்ததை வருவாய்த் துறையினா் கண்டறிந்தனா்.
இது குறித்த தகவல் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியனுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மஞ்சுளா மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கமண்டல நாக நதி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நான்கு யூனிட் மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் ஆற்றில் கலைக்கப்பட்டது.
எஸ் வி நகரம் செய்யாற்று ஆற்றுப்படுகையிலும் மணல் குவியல்கள் கலைக்கப்பட்டன கண்ணமங்கலம் உள் வட்டத்தில் கீழ்நகர் பகுதியில் ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
மேலும் குன்னத்தூர் கமண்டல நாக நதி ஆற்றுப்படுகையில் நான்கு யூனிட் மணல் ஜேசிபி மூலம் கலைக்கப்பட்டது. அப்பகுதிகளில் நான்கு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. மேலும் மணல் திருட்டை தடுக்க ரோந்து பணிகள் அதிகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu