/* */

மகளிர் குழு கடனை கட்டாயமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனை கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபடம் பேங்குகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

மகளிர் குழு கடனை கட்டாயமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற வங்கிகள் மற்றும் நிதிநிறுவன நிர்வாகிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் நிதி நிறுவன மேலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த நேரத்தில், மக்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உதவியாக இருக்க வேண்டும். அதை தவிர்த்து, கடன் மற்றும் வட்டி தொகையை மிரட்டியோ அல்லது கட்டாயப்படுத்தியோ வசூல் செய்யக்கூடாது.

மகளிர் குழு உறுப்பினர்களை வற்புறுத்தியோ, மிரட்டியோ அல்லது அவர்களது மனம் நோகும்படி நடந்து கொண்டால் 9444094133 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகாரின் மீது நேரடி விசாரணையின் போது உண்மையென கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான சமுதாய அமைப்பிலும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெறுவதை தவிர்த்து வங்கிகளில் கடன் பெற முயற்சிக்க வேண்டும். பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மற்றம் கிராம வறுமை ஒழிப்புச் சங்க கூட்டங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், பேங்குகள் மூலமாக கடன் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கொரோனா காலத்தில் அனைத்து மக்களும் விபத்து இன்சூரன்ஸ், மற்றும் ஆயுள் இன்சூரன்ஸ் திட்டங்களில் சேருவதை உறுதி செய்து உரிய படிவத்தை பேங்கில் செலுத்திஏற்பாடு செய்யவேண்டும். தகுதியான மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி கடன்களை மறுசீரமைப்பு செய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் பிரியா, முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ் குமார், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ரமேஷ்மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரிசர்வ் வங்கி மேலாளர் குமரன், பேங்க் மற்றும் நிதி நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Jun 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்