/* */

துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!

சாதி மதங்களை மட்டுமல்ல, உருவ வழிபாட்டையும் கடந்து நின்றவர், வள்ளலார். தெய்வம் என்று சொல்லி தன்னை வணங்க முற்படுவோரைக் கண்டு வருந்தினார்.

HIGHLIGHTS

துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
X

vallalar quotes in tamil-வள்ளலார் 

Vallalar Quotes in Tamil

சிதம்பரம் அருகே உள்ள மருதூர் என்னும் ஊரில் 1823ம் ஆண்டு அக்டோர் மாதம் 5ம் தேதி பிறந்த வள்ளார் 1874 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாள் மறைந்தார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியதில் இருந்தே அவரது கருணை உள்ளம் ணம்மாக்கு தெளிவாகும்.

Vallalar Quotes in Tamil

வள்ளலாரின் இயற்பெயர் திருவருட்பிரகாச வள்ளலார் என்பதாகும். இராமலிங்க அடிகளார் என்ற பெயரும் இப்பிவருக்கு உண்டு. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்ந்தவர்.

பசிப்பிணி போக்குவதுதான் அறச்செயலின் முதன்மையான பணி என்று போதித்தார். மக்களின் பசிப் பிணி போக்குவதற்காக, 1867ம் ஆண்டு வடலூர் அருகே பார்வதிபுரம் என்ற கிராமத்தில் 80 காணி நிலத்தை மக்களிடமிருந்து தானமாக பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார். அதில், எந்தவித பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்று வேளையும் உணவளித்து வந்தார்.

கடந்த 1867ம் ஆண்டு மே 23ம் தேதி தொடங்கப்பட்ட அந்த அன்னதான பணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 21 அடி நீளம், 205 அடி அகலம், ஆழம் கொண்ட அடுப்பு அன்று முதல் இன்றுவரை 154 ஆண்டுகள் அணையாமல் எரிந்து மக்கள் பசிப் பிணி போக்கி வருகிறது.

Vallalar Quotes in Tamil

அவர் நமக்கு அளித்துள்ள பல பொன்மொழிகள் காலம் கடந்தும் வள்ளலாரின் பெயரைத் தாங்கி நிற்கிறது. அவரது சிறந்த பொன்மொழிகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

வள்ளலார் மேற்கோள்கள்

கடவுளிடம் சரணடைந்தால் மட்டுமே நம்மிடம் இருக்கும். பொய் மற்றும் பொறாமை போன்ற தீய பண்புகள்

நம்மை விட்டு நீங்கும்

உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் மேல் உள்ள மரியாதையை பாதுகாக்கும்.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள்.

அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

பிறருடைய பசியைப்போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது.

பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.

மண்ணாசை கொண்டு மண்ணை ஆண்ட மன்னவர் எல்லோரும் மடிந்து மண்ணாகி

விடுவதை நீ அறிவாய் இருந்தும் நீ ஏன் மண்ணாசை கொண்டு அலைகின்றாய்..?

Vallalar Quotes in Tamil

உடலை வருத்தி விரதம் இருப்பதை விட.. யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.

உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.

எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைத்து சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான்.

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

Vallalar Quotes in Tamil

பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

மனதை அடக்க நினைத்தால் அடங்காது.. அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும்

எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும்.

புண்ணியம் மற்றும் பாவம் என்பன மனம், சொல், செயல் ஆகிய மூன்று வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.

சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.

வெயிலுக்கு ஒதுங்கும் மரத்தை வெட்டாதே.

Updated On: 7 May 2024 8:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!