/* */

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி: அரசு செயலாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை, மாவட்ட வாக்காளர் பட்டியில் அலுவலர் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி: அரசு செயலாளர் ஆய்வு
X

நாமக்கல் நகரில், வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்மந்தமாக, பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட வாக்காளர் பட்டியல் அலுவலர் சங்கர் கள ஆய்வு நடத்தி விசாரணை செய்தார். அருகில் மாவட்ட கலெக்டர் உமா.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை, மாவட்ட வாக்காளர் பட்டியில் அலுவலர் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 27.10.2023 முதல் 9.12.2023 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில் வசந்தபுரம், முதலைப்பட்டி புதூர், நாமக்கல் நகராட்சி அழகுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து விண்ணப்பம் செய்தவர்களிடம் வாக்காளர் பட்டியல் அலுவலரும், வேளாண்மைத்துறை அரசு செயலாளருமான சங்கர் நேரடியாக வாக்காளர்களை சந்தித்து, மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, கோரிக்கைகள் அடிப்படையிலான வகைப்பாடு, அவற்றின் மீதான நடவடிக்கைகள், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் குறித்து கேட்டறிந்து, மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வாக்காளர் பட்டியல் அலுவலர் சங்கர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், ஆர்டிஓக்கள் நாமக்கல் சரவணன், திருச்செங்கோடு சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Dec 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...