/* */

வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Coimbatore News- வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. சாலையில் பாறைகள் விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

HIGHLIGHTS

வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
X

Coimbatore News- பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறையில் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கவி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் வரக்கூடும் என்பதால், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் மற்றும் வால்பாறை சின்னக்கல்லார், சோலையார் உள்ளிட்ட போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக வால்பாறை வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் வரும்போது, சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவனமாக வாகனங்களில் வரவேண்டும் எனவும் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் அறிவுறுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள 16வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு சாலையில் வந்து விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் சாலையில் உள்ள பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பாறைகள் விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 18 May 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!