/* */

கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் பயணியர் விடுதி திறப்பு விழா

கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் பயணியர் விடுதி திறப்பு விழாவில் மாநில பதிவாளர் கலந்துகொண்டார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம்  சார்பில் பயணியர் விடுதி திறப்பு விழா
X

கொல்லிமலையில், கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஓரிலேண்ட் என்ற பயணிகள் தங்கும் விடுதியை, மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட இணை பதிவாளர் செல்வகுமரன்.

நாமக்கல்:

கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம் மூலம் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதியை, மாநில பதிவாளர் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள அரப்பளீஸ்வரர் கோயில், கொல்லிப்பாவை, எட்டுக்கை அம்மன் கோயில், பெரியசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி போன்ற அருவிகளும், பொட்டானிக்கல் கார்டன், வியூ பாயிண்ட், போட் ஹவுஸ் போன்றவைகளும் சிறப்பு பெற்ற இடங்களாக விளங்குகின்றன. கொல்லிமலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக அரசு சார்பில் இளைஞர் விடுதியும், தனியார் ஹோட்டல்களும் உள்ளன.

கொல்லிமலயில் கூட்டுறவுத்துறை மூலம் லேம்ப் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மலைவாழ் மக்களுக்கு, அரசின் மானிய உதவியுடன் பல்வேறு வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சங்கத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மிளகு, காபி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு மாநில அளவிலான கூட்டுறவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம் மலைவாழ் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இந்த நிலையில், கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவிடும் வகையில், இச்சங்கத்தின் மூலம் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில், ஓரிலேண்ட் காட்டேஜ் என்ற நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு தங்கும் விடுதியை திறந்து வைத்தார். மேலும், நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 1.70 கோடி மதிப்பில் கடன் உதவிகளை அவர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் செல்வக்குமரன், சரக துணைப்பதிவாளர் கர்ணன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மலைவாழ் மக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 May 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?