பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்

பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
X

பருவதமலை

பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலையில் பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணிகள் துவங்கி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கலசப்பாக்கம் தாலுக்கா தென் மகாதேவ மங்கலத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை அமைந்துள்ளது.

இந்த மலையின் உச்சியில் ஸ்ரீ பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இந்த கோயிலுக்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பௌர்ணமி க்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். பௌர்ணமி கிரிவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. சிவபெருமான் நந்தியாகவும், லிங்கமாகவும், திரிசூலமாகவும் மாறி மாறி காட்சியளிக்கும் பருவத மலையில் சித்தர்களும், ரிஷிகளும் ,முனிவர்களும், சூட்சம வடிவில் கிரிவலம் வருகின்றனர் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடத்தில் உள்ளது. பௌர்ணமி தினங்கள் மட்டும் இன்றி தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

4560 அடி உயரமுள்ள பர்வதமலை ஏறி செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான கடப்பாரை படி , ஆகாய படி , ஏணி படி என பல்வேறு படிகளை கடந்து மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

இந்நிலையில் மழைக்காலங்களில் மலை உச்சிக்கு செல்லும் பக்தர்களின் சிலர் இடி மின்னல் தாக்கி இறந்து விடுகிறார்கள் எனவே பக்தர்களின் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பருவதமலை உச்சியில் இரண்டு இடி தாங்கிகள் பொருத்தப்பட்டது.

இருப்பினும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது அதன் காரணமாக கோபுரத்தின் உச்சியில் உள்ள சிலை சேதம் அடைந்தது இதனால் இடிதாங்கிகள் பழுதாகி இருக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது இடிதாங்கி பொருத்தும் பொறியாளர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு இடிதாங்கி பழுதாகி உள்ளது என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூபாய் 4.80 லட்சம் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் இருந்து புதிதாக இடி தாங்கி வரவழைக்கப்பட்டு மழை உச்சிக்கு எடுத்துச் செல்லும் பணி நேற்று முதல் தொடங்கியது இடிதாங்கி பொருட்கள் அனைத்தும் மலையு உச்சிக்கு எடுத்துச் சென்று பொருத்தும் பணி கூடிய விரைவில் முடிவடையும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture