மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
ஜேசிபி இயந்திரம் மூலம் கலைக்கப்பட்ட மணல் குவியல்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் ஆரணி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட கமெண்டல நாக நதி படுகை மற்றும் செய்யாற்று ஆற்று படுகைகளில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தலின்படி ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி போளூர் ஜமுனா மருதூர் கலசப்பாக்கம் வட்டங்களில் அனுமதி இன்றி மணல் மற்றும் ஆற்று மணல் கடத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக்குழுவில் வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த சிறப்புக்குழுக்கள் சரியாக செயல்படுவதை கண்காணிப்பதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஆரணியை அடுத்த தச்சூர், மோட்டூர், செய்யாறு ஆற்றுப்படுகையில் ஜலித்து வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் குவியல்களை வருவாய் துறையினர் கலைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூா் ஆறு மற்றும் மோட்டூா் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்ட அலுவலர் உத்தரவின் படி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுரேந்தர், ஆய்வாளர் பார்த்திபன், வருவாய்த்துறையினர், மேற்கு மற்றும் கிழக்கு மண்டல துணை வட்டாட்சியர்கள், உள்ளிட்டோர் மோட்டூர் மற்றும் தச்சூர் செய்யாற்று ஆற்றில் கடத்துவதற்காக ஜலித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 யூனிட் மணல் குவியல்களை ஜேசிபி இயந்திரம் மூலம் கலைத்தனர்.
மேலும் மணல் கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் ஆற்றுக்குச் செல்லும் முக்கிய வழிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. மேட்டூர் நிலப் பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த 18 யூனிட் மணலை ஏலம் விட்டு அதற்கான பணத்தை அரசாங்க கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu