/* */

பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வு குறித்த பயிற்சி கருத்தரங்கம்

பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வு குறித்த பயிற்சி கருத்தரங்கம் நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வு குறித்த பயிற்சி கருத்தரங்கம்
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடைபெற்ற, பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வு பயிற்சி கருத்தரங்கில், கல்லூரி முதல்வர் ராஜா பேசினார்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்ட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்லூரியில் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயிற்சி கருத்தரங்கை துவக்கி பேசியதாவது:-

தகுதி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், அகில இந்திய அளவில், கல்லூரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவர். மேலும், இந்த தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, பி.எச்டி பட்டப் படிப்புக்கு, பல்கலை மானிய குழு, மாதம் தோறும் ரூ. 31 ஆயிரம் உதவி தொகை வழங்குகிறது. தேசிய தகுதி தேர்வுக்கு, இம்மாதம், 10 தேதி வரை விண்ணப்பிக்கலாம். இரண்டாம் ஆண்டு படிக்கும் முது கலை மற்றும் முது அறிவியல் துறை மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய துணை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வினை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து விளக்கினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதுகலை மற்றும் முது அறிவியல் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 1 April 2023 1:10 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!