/* */

அரசு கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்ட அளவீடு: மாணவர்கள் போராட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார்.

HIGHLIGHTS

அரசு கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்ட அளவீடு: மாணவர்கள் போராட்டம்
X

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்ட, நிலம் அளவீடு செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், டைடல் பார்க் கட்ட நிலம் அளவீடு செய்ததைக் கண்டித்து மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சேலம், ராசிபுரம், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக கல்லூரியின் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் வருவாய் துறையினர் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் துறையினரிடம் கேட்டபோது டைடல் பார்க் (தொழில்நுட்ப பூங்கா) கட்டுவதற்காக இடம் அளவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் பானுமதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்டினால் மாணவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இடம் இல்லாமல் போய்விடும். மேலும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கும். எனவே கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், என வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கல்லூரி முதல்வர் பானுமதி உறுதியளித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து வகுப்புகளுக்கு திரும்பினர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 21 March 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...