வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது

வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
X

கள்ளச்சாராய ஊரல் கொட்டி அழிப்பு

வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜா அவர்கள் மேற்பார்வையில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வேட்டவலம் கோட்டப்பாறை பகுதியில் உள்ள முட்புதர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் பிடரான் கோட்டை கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து சுமார் 140 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சுமார் 1400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

இருசக்கர வாகன திருட்டு இளைஞர் கைது

ஆரணி நகரப் பகுதியில் போலீசார் ரோண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தை திருடியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆற்று பாலம் அருகில் இருசக்கர வாகனம் திருடு போனதாக வேலூர் மாவட்டம் முள்ளியம் பாளையத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் ஆரணி நகர போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் ஆரணி போலீசார் ஆரணி நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அருணகிரி சத்திரம் அருகே உள்ள சேத்துப்பட்டு சாலையில் காவல் உதவியாளர் சுந்தரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தனது வண்டியை திருப்பி வந்த வழியே செல்ல முயன்றுள்ளார்.

உடனடியாக உதவி ஆய்வாளர் சுந்தரேசன் அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்ததில் அவர் இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் முருகன், என தெரியவந்தது.

மேலும், ஆரணி ஆற்றுப் பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, நகர போலீஸாா் திருடிய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனா்.

Tags

Next Story