/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர கட்டளைதாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிசேகம் நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் காலையில் வடைமாலை அலங்காரம். தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம். இதனையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

மேலும் மாலையில் சுவாமிக்கு தங்கத்தேர் உலா. பக்தர்களின் வேண்டுதல் மூலம் வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், மலர் அங்கி அலங்காரம், முத்து அங்கி அலங்காரம் போன்றவை நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டால் கடந்த ஆண்டு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டின் முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் 120 கிலோ வெண்ணையைப் பயன்படுத்தி சுவாமி முழுவதும் வெண்ணெயால் அலங்கரிக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் 3 மணி நேரம் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்தனர். பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 5 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்