/* */

ஆன்மீகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு: அமைச்சர் சேகர்பாபு

தமிழக அரசு ஆன்மீகத்துக்கு எதிரான அரசு அல்ல, ஆன்மீகவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் அரசு என்றார் அமைச்சர் சேகர்பாபு

HIGHLIGHTS

ஆன்மீகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு: அமைச்சர் சேகர்பாபு
X

அமைச்சர் சேகர்பாபு

தமிழக அரசு ஆன்மீகத்துக்கு எதிரான அரசு அல்ல, ஆன்மீகவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் அரசு என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது மனைவியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு மலைப்பாதை அமைக்கும் பணி மீண்டும் துவக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், புத்தாண்டின் போது அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அரசு ஆன்மீகத்துக்கு எதிரான அரசு அல்ல, ஆன்மீகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளோம். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் கோயில் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரியான கடவுள். எனவே இந்த கோயில் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே பணியாளர்களுக்காக, கோயில் அருகில் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் அருகில் பக்தர்கள் தங்குமிடம் ஏற்படுத்த முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்லப்படும். திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் நீதிபதிகள் முன்னிலையில் தங்கத்தை பிரிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. கோர்ட் அனுமதிபெற்று, கோயில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச்சென்று அந்த தங்கம் உருக்கப்பட்டு, டெபாசிட்டில் வைக்கப்படும். அந்த நிதி சம்மந்தப்பட்ட கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் போன்ற பரம்பரை அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்குவதற்கு அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த பணியும் மேற்கொள்ளப்படும். திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு ரோப்கார் வசதி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 1,640 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் 437ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில், ஆக்கிரமிப்பில் வைத்துள்ளவர்கள் அவர்களாகவே முன்வந்து நிலத்தை திருக்கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது, முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டமாகும். அதன்பிறகு 2015ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும், திருக்கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 24 பேருக்கு அர்ச்சகர் பணி நியமனை உத்தரவுகளை வழங்கியுள்ளார். அனைவரையும் ஊக்குவிக்கும் வøயில் அர்ச்சகள் பயிற்சிப்பள்ளி, வேத பாராயணப்பள்ளி போன்றவை துவக்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் இருந்து செலுத்தப்படும் வரியின் அடிப்படையில் நமக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு கொடுப்பார், தேவையில்லாத திட்டங்களுக்கு துணிந்து எதிர்ப்பு குரல் கொடுப்பார். இது ஆண்மீக பூமி என்றும் திராவிட நாடு என்பதையும் கருத்தில் கொண்டு முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் தமிழகத்தில் ஆக்கபூர்வமான பணிகளுக்கு உதவிட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் நலத்திட்டங்களுக்கு, பாஜகவினர்தான் கோர்ட்டிற்கு சென்று தடை பெறுகின்றனர் என்று கூறினார். போட்டியின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 2 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!