/* */

நாமக்கல்: வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்: வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு
X

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசினார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனைக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு வருகிற 12ம் தேதி, வெள்ளிக்கிழமை 110 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 183 பள்ளிகளைச் சேர்ந்த 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா, சிஇஓவின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்