/* */

பள்ளி சிறுமிகளுக்கு மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்க டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்க டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளி சிறுமிகளுக்கு மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்க டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி
X

பள்ளி சிறுமிகளுக்கு, மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்க, டாக்டர்களுக்கான சிறப்பு பயிற்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழுமையான அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி சிறார் நலத்திட்ட டாக்டர்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், வளரிளம் பெண்கள் 18 வயதிற்கு முன்னர் தாய்மையடைந்தால், அவர்களது பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு, பெண் குழந்தைகளின் கல்வி பாதிப்பு, உடல் நலக்குறைவு, பிறக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவு ஆகிய பிரச்சினைகள் உண்டாகின்றன.

பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆண் டாக்டர்கள் மற்றும் 15 பெண் டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவைப்பட்டால் இருதய பரிசோதனை மற்றும் கண் கண்ணாடி வழங்குதல், காதுகேட்கும் கருவி வழங்குதல், மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றோடு டாக்டர்கள் தாங்கள் செல்லும் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் தெரிந்துகொண்டு, அவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், உரிய ஆலோசனைகளையும் வழங்கி உதவ வேண்டும். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை ஆசிரியர்களின் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியள் உங்களை தொடர்பு கொண்டு, மருத்துவ ரீதியான சந்தேகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய தொலைபேசி எண்களை பள்ளிகளில் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தை திருமணம் நடைபெறாத, பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாத விழிப்புணர்வு பெற்ற இளைய தலைமுறையை உருவாக்க டாக்டர்களின் பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் இளம் சிறார் நலத்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 15 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!