வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
மாலை வேலை முடிந்து வரும் வேளையில் தங்களுக்குள் இருக்கும் பணத்தை ஒருவருக்கொருவர் பங்கிட்டு தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை, சப்பாத்தி மாவு, போன்றவைகளை வாங்கி வந்து தங்கள் தங்கிருக்கும் அறைகளிலே சமைத்து உண்ணுகின்றனர்.
இதன் மூலம் அவர்களது மாத சம்பளம் பெரிதும் சேமிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அஜினோமோட்டோ, ரசாயனம் கலந்த துரித உணவுகளை சென்று ஓட்டல்களில் உட்கொள்ளாமல் தாங்களே சமைத்து உண்ணுவதன் மூலம் அவர்களது ஆரோக்கியமும் மேம்படுகிறது.
சம்பாதிக்கும் பணத்தை எந்த மருத்துவருக்கும் மொய் வைக்காமல் தங்களது ஊரிலிருக்கும் சொந்த பந்தங்களுக்கு தங்களது சம்பளங்களை மாதம் மாதம் சரியாக அனுப்பி வைத்து பெருமூச்சு விடுகின்றனர்.
விடுப்பு, ஓய்வு எதுவுமில்லை, உள்ளூர் வாசிகள் புறக்கணிக்கும் வேலைகளை முன்வந்து கையில் எடுத்து முழு முயற்சியாக அதை செய்து முடிக்கின்றனர்.
இவர்கள் நமக்கு இன்னும் கற்றுக் கொடுக்காமல் அவர்களுக்குள்ளே ரகசியமாய் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் என்னவென்றால், எந்த ஊதியத்திற்கும் சகிப்புத்தன்மையுடன் வெட்கப்படாமல் கடுமையாய் முன்வந்து உழைப்பது.
ஓட்டல்கள், துரித உணவுகள் என விஷங்களை உண்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாய் தன்னிச்சையாக சமைத்து சத்தான உணவுகளை உண்ணுவது.
இது தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களுக்கு மட்டுமில்லை தமிழகத்தில் இவர்கள் வேலை செய்யும் எல்லா இடங்களுக்கும் இது பொருந்தும்.
இதில் சில தீய பழக்கங்களுக்கு உட்பட்டிருக்கும் வடமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர மற்ற எல்லா வடமாநிலத்தவர்களும் தங்களது ஆரோக்கியத்தின் மீதும் தங்களின் ஊதியத்தின் மீதும் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.
முக்கியமாக இவர்கள் மது குடி பழக்கத்திற்கு அடிமையாகவில்லை. ஒரு மூட்டை உருளைக்கிழங்குக்காக கூடுதல் நேரம் உழைக்கும் இவர்களது மெனக்கெடலை பார்த்து சுதாரித்து உள்ளூர்வாசிகள் உழைக்க முன் வர வேண்டும். சிந்திக்க வேண்டும் நம் மக்கள்.......
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu