தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை உயிரிழப்பு!
படவிளக்கம்: தனியார் விளை நிலத்தில் புகுந்த காட்டு யானையை படத்தில் காணலாம்
தமிழக - கேரள எல்லையில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டுயானை- விவசாயிகள் அச்சமடைந்த நிலையில் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை பகவதிபுரம் ரயில்நிலையம் அருகே கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் ஒற்றை காட்டு யானை ஒன்று நேற்று முகாமிட்டிருந்தது.
இந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கோட்டை வனத்துறையினர் யானையை விரட்ட முயற்சி செய்தும் யானையானது நகராமல் அதே இடத்தில் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
மேலும், தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வரும் நிலையில், தற்போது தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள தனிநபருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று முகாமிட்டு அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் யானையானது முகாமிட்டுள்ள நிலையில் அதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டும் யானை வனத்திற்குள் செல்லாததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்திருந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த யானை உயிரிழந்தது. இது விவசாயகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu